Published Date: March 7, 2023
CATEGORY: CONSTITUENCY
இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் மதுரை லேடி டோக் பெருமாட்டி கல்லூரியில் நேற்று (6 - 3 - 2023) நடைபெற்ற விழாவில் காதுகேளாதோர் ஒலிம்பிக் போட்டியில் மூன்று தங்கப்பதக்கம் வென்றமைக்காக அர்ஜுனா விருது பெற்ற செல்வி.ஜெ.ஜெர்லின் அனிகாவைப் பாராட்டி கல்லூரி நிர்வாகம் சார்பாக ஊக்கத்தொகைக்கான காசோலையை வழங்கினார். வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி .மூர்த்தி, நிதி மற்றும் மனித வள மேலாண்மைத்துறை அமைச்சர் முனைவர்.பழனிவேல் தியாகராஜன், அரசு கூடுதல் தலைமைச் செயலாளர் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை அதுல்ய மிஸ்ரா, தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் /செயலர் ஜெ.மேகநாத ரெட்டி, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ். அனீஷ் சேகர், மாநகராட்சி மேயர் திருமதி.இந்திராணி பொன் வசந்த், மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் கோ. தளபதி, லேடி டோக் பெருமாட்டி கல்லூரி முதல்வர் டாக்டர்.கிறிஸ்டியானா சிங் ஆகியோர் உடன் உள்ளனர்.
Media: Murasoli